1. புகைமூட்டம் போடுவது(Fumigation) தேவையில்லை.
2. புகைமூட்டம் போடுவதற்கு தேவைப்படும் சல்பாஸ் போன்ற பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கும், மற்றும் தார்ப்பாலின்களுக்குமான செலவிடும் பணம், வேலை ஆட்களின் கூலி முற்றிலும் சேமிக்கப்படுகிறது.
3. பூச்சி தாக்குதல் முற்றிலும் தடுக்கப்படுகிறது. அதனால் தானியங்களில் எடை இழப்பு ஏற்படுவதில்லை!
4. பூச்சிக்கொல்லி மருந்துகள் உபயோகிப்பது/ அல்லது புகைமூட்டம் (Fumigation) போடுவது ஒரு தற்காலிகமான தீர்வே. இவை நிரந்தரமாக பூச்சிகளை அழிப்பதில்லை. மேலும் இவைகள் பூச்சிகள் உருவாகுவதை தடுப்பதில்லை.
5. விதைகளின் முளைப்புத் திறன் மற்றும் வீரியத்தன்மை குறைவதில்லை.
6. தானியங்களின் சத்துக்கள் முன்னா இருந்த அளவே, எப்போதும் இருக்கும். சத்துக்களில் குறைபாடுகள் ஏற்படுவதில்லை.
7. பூச்சிகளின் எச்சங்கள் தானியங்கள் மேல் படிவதும், தானியங்களின் மேல் பூச்சி மருந்துகள் படிவது போன்றவை முற்றிலும் தவிர்க்கப்படுகின்றன.
8. தானியங்களின் மணம், ஈரத்தன்மை, மேற்பரப்பு, தடிமன், பொலிவு, போன்றவற்றில் எந்த மாற்றமும் இருக்காது.
9. குளிர்பதன கிடங்குகளுக்கு கொண்டு செல்லும் லாரி வாடகை. மற்றும் அங்கிருந்து கொண்டு வரும் டெம்போ மற்றும் லாரி வாடகை, மேலும் குளிர்பதன கிடங்குகளுக்கு கொடுக்கும் வாடகை முற்றிலும் மீதமாகும். இதையெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது, “Grains God" Hermetic Storage Bags களின் விலை, ஒரு பொருட்டாகவே தெரியாது.!
10. விளைச்சல் முடிந்தவுடன், பூச்சி விழுந்து விடும் என்ற அச்சத்திலேயே, பொருட்களை உடனடியாக குறைந்த விலையில் விற்க வேண்டிய அவசியம் இல்லை. சீசன் இல்லாத பொழுது விலை ஏறும்பொழுது, வீட்டிலேயே, இதனை இந்த முறையில் பாதுகாத்து வைத்து, பிற்பாடு நல்ல நிலையில் விற்கலாம்.
11. நிலக்கடலையில் Aflatoxin என்ற நச்சுத்தன்மை இந்த பைகளில் ஏற்படாது.
12. எங்கள் பைகள் ஒரு நிலையான வடிவத்தில் வருவதால் அவை அடுக்கி வைப்பதற்கு எளிது. நிறைய பைகளை , குறைந்த இடத்தில் கூட வைத்துக் கொள்ளலாம்.
13. எங்கள் பைகளை நீங்கள் திரும்பத் திரும்ப, பலமுறை, பல வருடங்களுக்கு உபயோகிக்கலாம்.
14. இதற்கு அதிகமாக பணியாட்கள் தேவைப்பட மாட்டார்கள்.
14. தேவைப்பட்டால், மூட்டைகளில் மட்டுமல்லாமல் தானியங்களை, லூசாகவே, 500 கிலோ, ஆயிரம் கிலோ, எடைகளில் ஒரே, பெரிய சைஸ் பைகளில், சேமிக்கலாம்.
15. எங்களது "Grains God" தானிய சேமிப்பு பைகள், கிழியாதது, சாயம் போகாதது, மற்றும், ஒருபோதும் சூரிய வெப்பத்தினால் பாதிக்கப்படாதது!
16. எங்களிடம் 30 கிலோ, 50 கிலோ, 70 கிலோ எடை உள்ள பைகள் ரெடியாக இருக்கும். தங்களுக்கு தேவையான அளவுகளிலும் உடனுக்குடன் பிரத்யேகமாக செய்து அனுப்ப முடியும்.
17. பொதுவாகவே பூச்சி மருந்துகள் தெளிக்கப்பட்ட தானியங்களை, புகை மூட்டத்திற்கு (Fumigation) பிறகு, ஒரு வாரம் கழித்து கழித்து தான், (கழுவிய பிறகு) உபயோகப்படுத்த வேண்டும். ஆனால் நமக்கு ஒரு வாரம் கழித்து தான், நமது கையில் கிடைத்ததா என்று தெரியாது ! அவ்வாறு ஒரு வாரத்திற்குள் விற்பனைக்கு வந்து நாம் அவை உபயோகப்படுத்தினால் அவை நம் உடல் நலத்திற்கு கேடு!
18. நாங்கள் புதிதாக தானிய வகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, தேவைப்படும், பயன்பாடுகள் பற்றிய அறிவுரைகளை தருவதற்கு தயாராக உள்ளோம்.