Hermetic Bag

ஆரோக்கியத்திற்கு ஆபத்து விளைவிக்கும் பூச்சிக்கொல்லிகள்

இந்தியாவில் தற்போது தானியங்கள் சேமிக்கும் பொழுது, பூச்சிகளால் ஏற்படும் இழப்புகளை, சமாளிக்க, கையாளப்படும் செயல்பாடுகள்:

1) தானிய மூட்டைகளை அடக்கி, அதன் அடியில் சல்பாஸ் போன்ற, ஆபத்தான கெமிக்கல், மாத்திரைகளை, வைத்து அதன் மேல் காற்று போகாதவாறு தார்பாலின்கள் போடுகிறார்கள். ஆனால் இவை ஒரு சில காலம் ஒரு சில காலத்தில், அதனுடைய வீரியத்தை இழந்து விடுகிறது. சரியாக மூடப்படவில்லை என்றால் அந்தப் புகை விரைவில் வெளியேறி விடுகிறது.

2) பூச்சிக்கொல்லி மருந்துகள்:

Malathion, Fenvalerate, Cyper Methrin, Deltamethrin, Ethylene Dichloride, Carbon Tetrachloride, Methyl Bromide, Hydrogen Phosphide, Aluminium Phosphide, and Tablets such as, Alphos, Celphos, Phosphume, Quickphos Etc..

மேற்கண்ட மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும், கெமிக்கல், மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை தானிய மூட்டைகள் மேல் தெளிக்கிறார்கள். இவை தானியங்கள் மேல் பரப்பில் படிந்து விட வாய்ப்புகள் அதிகம்.

அனைத்து வகையான பூச்சிகளும், அந்தந்த தானியங்களை, உண்டு, நன்றாக சுவாசித்து, இனப்பெருக்கம் செய்து, அதன் கழிவுகளையும் / எச்சங்களையும் தானியங்கள் மீது பரப்புகின்றன. இதை சாப்பிடும் மக்களுக்கு உடல்நலத்தில் நிறைய பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளன.

இதை சமாளிக்க உபயோகப்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகள் இன்னும் அதிக பாதிப்புகளை உண்டு பண்ணுகின்றன.

உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, அதிக அளவில் பூச்சி மருந்து தெளிக்கப்பட்ட மற்றும் Aflatoxin Content உள்ள தானியங்களை தொடர்ந்து சாப்பிடும் பொழுது கல்லீரல் பாதிப்படைகிறது, புற்றுநோய்க்கு வழி வகிக்கிறது மற்றும் ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பதற்கு காரணமாகிறது.

கெமிக்கல்கள் மற்றும் பூச்சி மருந்து இல்லாமல் தானியங்களை பாதுகாப்பது மிகவும் முக்கியமானதும், அவசியமானதும் அவசரமானதும் ஆகும்.

grain god 49
grain god 47
img
grain god 50