Grains God பயன்படுத்தும் முறை:
- தானியங்களை தூசு மற்றும் மாசு இல்லாமல் பிரித்து எடுத்து, வெயிலில் உலர வைத்து, பரிந்துரைக்கப்பட்ட ஈரப்பதத்தை( Moisture) உறுதி செய்து கொள்ளவும்.
- பைகளில் முக்கால் பங்கு(3/4) நிரப்பி பைகளை நன்றாக, நான்கு புறமும் குலுக்கி, மேல் பகுதியை இறுக்கி கயிறால் கட்டவும். அல்லது மடித்து cellophane Tape வைத்து நன்றாக ஒட்டவும். (இதை பிரித்து எடுக்கும் பொழுது பைகளுக்கு எந்த பாதிப்பும் வராது).
- அடிக்கடி திறந்து மூட வேண்டாம்.
- பைகளை நேரடியாக தரையில் வைக்காமல், மரப்பலகைகள் மேல் வைத்தால் நலம்.
- எலி, வெப்பம், கூர்மையான பொருட்கள், பைகளை தொட்டு சேதப்படுத்தாமல் வைப்பது மிகவும் நல்லது.
- இவற்றை ஆறு முதல் 15 மாதங்கள் வரை வைத்துக் கொள்ளலாம்.
- மஞ்சள் மற்றும் தேங்காய் கொப்பரை போன்றவை வைக்கும் போது, உள்ளிருக்கும் காற்றை மெஷின் மூலம் வெளியில் எடுத்துவிட்டு கட்டி வைத்தால் மிகச் சிறந்த பலன்கள் கிடைக்கும்.